குளச்சல் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்து மீன் வியாபாரி பலி
குளச்சல் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்து மீன் வியாபாரி பலியானார்.
குளச்சல்,
குளச்சல் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்து மீன் வியாபாரி பலியானார்.
விபத்தில் பலி
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஜாண் போஸ்கோ. இவருடைய மகன் ஜாண் ஜினோ (வயது34), மீன் வியாபாரி. சம்பவத்தன்று இரவு ஜாண் ஜினோ தனது ஸ்கூட்டரில் கோடிமுனையில் இருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோடிமுனை கல்லறை தோட்டம் அருகே சென்றபோது, திடீரென ஒரு நாய் சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதனால், ஜாண் ஜினோ பிரேக் போட்டதில் நிலைதடுமாறி ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஜாண் ஜினோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் ஜினோ நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இறந்த ஜாண் ஜினோவுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.