நியமனக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
நியமனக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு;
மணப்பாறை, ஏப்.1-
மணப்பாறை நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை கூட்ட அரங்கில் நடத்த அதிகாரிகள் தயாராக இருந்தனர். காலை 9.30 மணி முதல் 10 மணி வரை வேட்பு மனு தாக்கல் கால நேரம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள், 5 சுயேச்சை உறுப்பினர்கள், 13-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் என 17 பேர் தேர்தலில் பங்கேற்கவில்லை. இதையடுத்து போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஏற்கனவே நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டபட்டுள்ள நிலையில் தற்போது நியமனகுழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.