ஓடும் காரில் திடீர் தீ

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-31 18:47 GMT
ராஜாக்கமங்கலம், 
ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் தீ
ராஜாக்கமங்கலம் அருகே ஸ்ரீகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்ராம் (வயது 40), தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான காரில் ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரில் தினேஷ் ராம் மட்டுமே இருந்துள்ளார். கணபதிபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது திடீரென கார் ஏ.சி.யில் இருந்து புகை எழுந்தது. உடனே தினேஷ்ராம் ஏ.சி.யை அணைத்துள்ளார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த அவர் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.
அந்த சமயத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக தினேஷ்ராம் உயிர் தப்பினார்.

மேலும் செய்திகள்