வாகனம் மோதி புள்ளிமான் சாவு
சிங்கம்புணரி அருகே வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலை எஸ்.வி.மங்கலம் மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி எதிரே சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இறந்து கிடந்தது. தகவலறிந்த வனச்சரகர் மதிவாணன் உத்தரவின் பேரில் வனவர் உதயகுமார், வனக்காப்பாளர் வீரைய்யா, வனக்காவலர் சின்னப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அடக்கம் ெசய்தனர்.