பேரூராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு

தொண்டி, முதுகுளத்தூர் பேரூராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-31 18:38 GMT
தொண்டி,

தொண்டி, முதுகுளத்தூர் பேரூராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தொண்டி

தொண்டி பேரூராட்சியில் பணி நியமன குழு உறுப்பினர் மற்றும் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் செயல் அலுவலருமான செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.இதில் இரண்டாவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தாஸ் பணி நியமனக்குழு உறுப்பினராகவும், 7-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காத்த ராஜா, கவுன்சிலர்கள் ரகுமத் குபுராபீவி முகமது மைதீன், செய்யது அபு தாஹீர், பெரியசாமி ஆகியோர் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேரூராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானுஜவஹர் அலிகான், துணைத் தலைவர் அழகுராணி ராஜேந்திரன். செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற நியமன குழு வரிவிதிப்பு குழு மற்றும் மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் தேர்தல் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமையில் துணைத்தலைவர் வயணப்பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான மாலதி அனைவரையும் வரவேற்றார். இதில் 9-வது வார்டு உறுப்பினர் பால்சாமி மட்டும் நியமன குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டதால் தேர்தல் அலுவலர் மாலதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் வரிவிதிப்பு குழு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக உம்மு தர்தா, நாகூர் மீரா, சுந்தராம்பாள், தனலட்சுமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சாயல்குடி

சாயல்குடி பேரூராட்சியில் நேற்று நியமன குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி 15-வது வார்டு போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர் மாணிக்கவேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் சாயல்குடி தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாயல்குடி பேரூராட்சி நியமன குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மாணிக்கவேல், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்