பால் குளத்தி அம்மன் கோவிலில் முன்னோட்டம்- பின்னோட்டம் நிகழ்ச்சி
உடையாளூர் பால் குளத்தி அம்மன் கோவிலில் முன்னோட்டம்- பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்:-
உடையாளூர் பால் குளத்தி அம்மன் கோவிலில் முன்னோட்டம்- பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பால்குளத்தி அம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 16-ந் தேதி திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி சாமி புறப்பாடு நடைபெற்றது.
முன்னும், பின்னும் ஓடி நேர்த்திக்கடன்
விழாவையொட்டி நேற்று காலை குதிரை வாகனம், யானை வாகனத்தில் செல்வ மகாகாளி அம்மன், பால் குளத்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முன்னோட்டம்- பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உடையாளூரின் மையப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு அம்மன் வாகனத்தை சுமந்து முன்னும், பின்னும் ஓடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.