ராசிபுரம் அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பார்த்தனர்

ராசிபுரம் அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பார்த்தனர்

Update: 2022-03-30 15:38 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் நேற்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மேலும் கரகம் எடுத்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல் வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் மதியம் நடந்தது. மாலையில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ராசிபுரம், பட்டணம், காக்காவேரி, வடுகம், ப.மு.பாளையம், மேட்டுக்காடு உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை பார்த்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (வியாழக்கிழமை) இரவு அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் நகர்வலம் வருதல் மற்றும் வானவேடிக்கை நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் மஞ்சள் நீராடல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் விழாக்குழு நண்பர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்