14 பவுன் நகைகள்- ரூ.22 ஆயிரம் கொள்ளை

மணல்மடு அருகே ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2022-03-28 16:47 GMT
மணல்மேடு;
மணல்மடு அருகே ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 
திருமணத்துக்கு சென்றார்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள அடுத்த காளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(வயது62). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று பாலகுரு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சீர்காழிக்கு சென்றார். நேற்று அவர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
வலைவீச்சு 
விசாரணையில்  மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து, கிரில் கேட் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து வீட்டின் இரு அறைகளிலும் இருந்த 2 பீரோவை  உடைத்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணல்மடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை - பணத்தை திருடி சென்ற சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்