கிருஷ்ணகிரியில் தொழில் கூட்டுறவு சங்க கோரிக்கை விளக்க கூட்டம்

கிருஷ்ணகிரியில் தொழில் கூட்டுறவு சங்க கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.

Update: 2022-03-28 16:47 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ஸ்டாப்ஸ் யூனியன் ஆப் தமிழ்நாடு சோஷியல் வெல்பேர் டிபார்ட்மெண்ட் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டீஸ் 5-வது கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகானந்தம், முத்துகுமார், நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.  
அப்போது அவர், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் 98 மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தையல் கூலியை நிர்ணயிக்காததால், கடும் வேதனையில் மகளிர் தையல் சங்க உறுப்பினர்கள் உள்ளனர். மாணவிகளின் கோட் தையல் கூலியை உடனடியாக அறிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள தையல் கூலித்தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து சீருடைகளுக்கும் தையல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநில பொருளாளர் மாதேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்