கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
கள்ளக்குறிச்சியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள், குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்திட வேண்டும்.
ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 11,300, தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 9,920, தூய்மை காவலர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 6,150 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
202 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 202 ேபரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.