தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஊழியர்கள் கடலில் குதித்து போராட்டம்

தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஊழியர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-28 16:27 GMT
தூத்துக்குடி :
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறைமுக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு காற்றாலை இறகுகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் புறப்பட தயாராக இருந்தது. அந்த கப்பலை வெளியில் அனுப்புவதற்கு கப்பல் தளத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்து விடுமாறு ஊழியர்களிடம் கூறப்பட்டது. ஆனால், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதனால் வேறு நபர்கள் மூலம் கப்பலை வெளியில் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஊழியர்கள் கடலில் குதித்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்