நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கீழையூரில் நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:
கீழையூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமை தாங்கினார்.
நுண்ணீர் பாசன கருவிகளை தயார் செய்யும் நிறுவனத்தினர் நுண்ணீர் பாசனத்தின் அவசியம் குறித்தும் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.அதனைதொடர்ந்து வேளாண்மை உதவி அலுவலர் மணிமேகலை நுண்ணீர் பாசன திட்ட மானியங்கள் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து பேசினார்.இதில் கீழையூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் அருள்பிரகாசம், உதவி தொழில்நுட்ப மேலாளர் வினோதினி மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.