சரக்கு வாகனத்தில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு

விளாத்திகுளம் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது.

Update: 2022-03-28 16:20 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னூர் கிராமத்தில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று காடல்குடி நோக்கி வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதில் இருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தில் சோதனை செய்ததில், 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்