கொத்தனாரை அரிவாளால் வெட்டிய நண்பர் கைது

திட்டச்சேரியில், தனியாக வேலைக்கு சென்றதால் ஆத்திரத்தில் கொத்தனாரை அரிவாளால் வெட்டிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-28 16:17 GMT
திட்டச்சேரி:
 திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரி பகுதியை சேர்ந்த  சரவணன் (வயது 48). திட்டச்சேரி ப.கொந்தகை டி.ஆர்.பட்டினம் ரோட்டை சேர்ந்த  ராஜா (49). கொத்தனாரான இவர்கள் இருவரும் நண்பர்கள். சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு திருச்சி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று முன்தினம் சொந்த ஊரான ஆலங்குடிச்சேரிக்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து நண்பர் ராஜாவை பார்ப்பதற்காக அவரது  வீட்டுக்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு 2 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது சரவணனிடம் நாம் இருவரும் வேலைக்கு எங்கு சென்றாலும் ஒன்றாக தானே செல்வோம். ஏன் என்னை விட்டு திருச்சிக்கு வேலைக்கு சென்றாய் என ராஜா கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  ராஜா வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சரவணனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்