வந்தவாசி நகரமன்ற கூட்டம்
வந்தவாசி நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் எச்.ஜலால் தலைமையில் நடந்தது.
ஆணையர் முஸ்தபா, துணைத்தலைவர் அன்னை க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றக்கோரி பேசினர்.
அதற்கு நகரமன்ற தலைவர் எச்.ஜலால், நகரமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி உள்ளிட்டோர் நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை வாழ்த்தி பேசினர்.