கன்னிவாடி அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

கன்னிவாடி அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

Update: 2022-03-28 15:43 GMT
கன்னிவாடி:
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மூங்கில் பண்ணை, முட்டுக்கோம்பை ஆகிய வனப்பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது வனப்பகுதியில் இருந்த அரியவகை மரம், செடிகள் பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பணியாளர்கள் வனப்பகுதிக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வனப்பகுதியில் காற்று வீசி வருவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இருப்பினும் வனத்துறை பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் சுமார் 50 ஏக்கரில் இருந்த மரம், செடி, கொடிகள் கபளீகரமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்