சாணார்பட்டி அருகே பாதையை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடிப்பு
சாணார்பட்டி அருகே பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றப்பட்டது.
கோபால்பட்டி:
இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷாராமகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொடர்ந்து வீடு இடிக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது.
சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சி கோட்டைகாரன்பட்டி 2-வது வீதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சென்று வருவதற்கு திண்டுக்கல்-நத்தம் மெயின்ரோட்டில் இருந்து பாதை உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாதையை ஆக்கிரமித்து, அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவர் வீடு கட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த வீட்டை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் திண்டுக்கல் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் தனபாலன் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை அங்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷாராமகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொடர்ந்து வீடு இடிக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது.