பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு ரூ.73 லட்சத்தில் சொந்த கட்டிடம்
பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் அமைக்க ரூ.73 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இங்கு பள்ளிப்பட்டு போலீஸ் நிலையம் தற்போது தனியார் வாடகை கட்டிடத்தில் சோளிங்கர் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை. இதனால் பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக போலீஸ்துறை போலீஸ் நிலையம் கட்ட இடம் தேடி வந்தது. அப்போது பள்ளிப்பட்டு அருகே கோனேட்டம்பேட்டை கிராமத்தை சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை போலீஸ் நிலையம் அமைக்க தானமாக வழங்கினார்.
இந்த நிலத்தில் போலீஸ் நிலையம் அமைக்க ரூ.73 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது கட்டிட பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் ஏப்ரல் மாதம் போலீஸ்துறையிடம் ஒப்படைத்து, அதன் பின்னர் திறப்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.