ஊட்டி
நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று நடைபெற்றது. கண்காட்சியில் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது, மீட்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட மாவட்ட கலெக்டருக்கு ராணுவத்தினர் விருது வழங்கியது, மாவட்டந்தோறும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தீர்வு காணுதல்,
நகர பஸ்களில் மகளிர் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள், அறிவிப்புகள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட்டனர். கண்காட்சி நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.