செம்மறி ஆடுகள் வரத்து அதிகரிப்பு

செம்மறி ஆடுகள் வரத்து அதிகரிப்பு

Update: 2022-03-28 12:54 GMT
ட்டங்களில் பெரிய சந்தை ஆகும். இந்த சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள், கோழி, கறிக்கோழி, கட்டுசேவலை அதிகம்விற்பனைக்கு கொண்டு வருவார்கள். குன்னத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் காடுகள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிகமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். தற்போது வெயில் காலம் ஆதலால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில்லை. ஆகவே ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி, சேலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
‌ அதேபோல் குன்னத்தூர் சந்தையில் செம்மறி ஆடுகள்வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா கேரளா, மத்திய பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் நான்கு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆகவே நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தைக்கு அதிகமான செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வாரங்களில் 10 ஆயிரம் செம்மறி ஆடுகள் வந்திருந்தது.  சந்தையில் ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செம்மறி ஆடுகள் விற்பனையானது. 

மேலும் செய்திகள்