திருப்பூர் ஆலங்காடு முதல் வீதி தீப்தி டையிங் கார்னரில் சாக்கடைநீர் தேங்கி நீண்ட நாட்களாக நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.