வாணியம்பாடியில் ெரயில் மறியல் செய்ய முயன்ற 53 பேர் கைது
வாணியம்பாடியில் ெரயில் மறியல் செய்ய முயன்ற 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
தி.மு.க, கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்பட தொழிற்சங்கத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள் வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை திரும்பப் பெற ேவண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வாணியம்பாடி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார் விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அங்கு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.