உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, உண்ணாவிரதம் இருந்தனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது . இந்த ஆலை நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு மாதம் தோறும் வழங்கப்பட வேண்டிய சம்பளம் அந்தந்த மாதங்களில் வழங்கப்படாமல் காலம்கடந்தே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆலைத்தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகை பல மாதங்களாக பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல்நிலுவைஉள்ளது.
உண்ணாவிரதம்
அதனால்ஓய்வுபெறும்தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பணப்பலன்கள் கிடைப்பது தாமதமாகிறது.அதனால் பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தப்படவேண்டிய நிலுவைத்தொகையை அந்த அலுவலகத்திற்கு ஆலை நிர்வாகம் செலுத்தவேண்டும்.
அதேபோன்று சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் சிக்கன சேமிப்பு கடன் சங்கத்தில் இருந்துகடன்பெற்ற தொழிலாளர்களின் கடனுக்கான தொகை ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டும், அந்த கடன் தொகை அந்தசங்கத்திற்கு செலுத்தப்படாமல் உள்ளது. அந்த தொகையை கடன் பெற்ற தொழிலாளர்களின் பெயரில் அந்த கடன் சங்கத்திற்கு செலுத்த வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டிய பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும். சர்க்கரை ஆலை மற்றும் இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலையில் எரிசாராய ஆலை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் போன்ற வலியுறுத்தி நேற்று ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் அவர்கள் ஆலையின் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.அப்போது சிலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.