மோட்டார் சைக்கிள் விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி சாவு

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-28 12:23 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கைகிளாந்தானதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). 

இவர், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 26-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தார். சேவூர் பைபாஸ் சாலை அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில், பலத்த காயம் அடைந்த சங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து சங்கரின் மனைவி லதா ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

விபத்தில் பலியான சங்கருக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்