உலக பார்வை அளவியல் தினத்தையொட்டி சென்னையில், விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக பார்வை அளவியல் தினத்தையொட்டி சென்னையில், விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது.

Update: 2022-03-28 11:51 GMT
உலக பார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறனை பரிசோதித்து குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி சார்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில், டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரியில் படிக்கும் சுமார் 100 மாணவர்களுடன், உடல்நல பராமரிப்பு துறையை சேர்ந்த 30 பேரும் பங்கேற்றனர். தாம்பரம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணரும், முதன்மை மருத்துவ இயக்குனருமான டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரியின் ‘டீன்' டாக்டர் கற்பகம் தாமோதரன் கூறும்போது, ‘பார்வைத்திறனை பாதிக்கும் கண் நோய்கள், பார்வைக்கோளாறுகள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், குழந்தை பருவத்தில் பார்வைத்திறனை பேணும் முறை, டிஜிட்டல் மயமாக மாறிவிட்ட உலகில் பார்வைத்திறன் பராமரிப்பு ஆகிய தலைப்புகள் குறித்து சரியான தகவல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே மனித சங்கிலியின் நோக்கமாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்