கொலபாவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது
கொலபாவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
கொலபாவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியால் குத்தினார்
கொலபா, புத்வார் பார்க் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான் பாபு(வயது30). இவரது மனைவி சாகீன். முகமது இர்பான் பாபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பத்தன்று இரவு 2 பேரும் கூப்ரேஜ் மைதானம் அருகில் இருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், மனைவியை கத்தியால் குத்தினார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரியில் பலி
போலீசார் காயமடைந்த பெண்ணை மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கத்தியால் குத்திய முகமது இர்பான் பாபுவை கைது செய்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் அனுக்கப்பட்டு இருந்த சாகீன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் முகமது இர்பான் பாபு மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----