உலக தியாகிகள் தினம் அனுசரிப்பு

உலக தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2022-03-27 22:18 GMT
பெரம்பலூர்:
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் உலக தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. மையத்தின் இயக்குனர் ஜானகிராமன் அறிவுறுத்தலின்பேரில், நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த பகத்சிங், சுகுதேவ், சிவ்ராம் ஆகிய தியாகிகளின் வீர தீர செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் மாணவ-மாணவிகள் வீர வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வள்ளி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்