விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற 2 பேர் கைது
விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீசார் கல்லகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் சில்லகுடியை சேர்ந்த செல்லமுத்து(வயது 43), அய்யாக்கண்ணு(73) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 250 மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு அந்த வழியாக வந்தனர். அவர்களை போலீசார் மறித்து சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வாங்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.