திருச்சியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி

திருச்சியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-03-27 21:55 GMT
திருச்சி
தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக் கலையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்ப கோர்வை சார்பில் திருச்சி தில்லைநகரில் உள்ள பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 293 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றினர். அதேநேரத்தில் சிங்கப்பூரில் இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணி முதல் 7 மணி வரையில் 47 பேரும், மலேசியாவில் 63 பேர் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரையிலும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சி இணையதளம் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு லண்டன் ஹார்வேர்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மோகன் தெரிவித்தார். இதற்கிடையே திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி சுகித்தா காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக 4 மணி இடைவிடாது சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.

மேலும் செய்திகள்