காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த சீலைபிள்ளையார்புத்தூர் இலுப்பைத்தோப்பு தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் தீபன்(வயது 23), அதே தெருவைச் சேர்ந்த பரஞ்சோதி மகன் சுமன்(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.