கர்நாடகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 26 ஆயிரத்து 596 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 51 பேர் உள்ளனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் தற்போது 1,777 பேர் உள்ளனர். ஒரே நாளில் 62 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.56 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 20 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.