சுரண்டை அருகே 345 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல் முதியவர் கைது
345 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல் முதியவர் கைது
நெல்லை:
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 9 கேன்களில் 345 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது அங்கு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 64) என்பதும், தனது வீட்டில் ரேஷன் மண்எண்ணையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார், சந்திரசேகரனை கைது செய்து, அவரிடமிருந்து 345 லிட்டர் மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர்.