அச்சன்புதூர்: வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் வெற்றி

வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் வெற்றி

Update: 2022-03-27 21:03 GMT
அச்சன்புதூர்:
தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான வினாடி- வினா போட்டி செய்யது ஹில் வியூ பள்ளியில் நடைபெற்றது. 
போட்டியில் விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவன் நாதிரா ரவ்ஷன், 2-ம் வகுப்பு மாணவன் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முதலிடம் பெற்று ரொக்கப்பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகம்மது பாஹிம், முகமது ஆதிக், முகம்மது அர்பான், 3-ம் வகுப்பு மாணவன் முகம்மது ஷையான் ஆகிய மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு 4-ம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். 
இவர்களையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் ரசூல் பீவி, முத்துச்செல்வி ஆகியோரையும் விஸ்டம் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்