மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி

ஏத்தாப்பூா ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி நடந்தது.

Update: 2022-03-27 20:58 GMT
பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகளுக்கான மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி மற்றும் கண்காட்சி நடந்தது. மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைமை இயக்குனர் வெங்கடாசலம், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்காச்சோள படைப்புழு மேலாண்மை குறித்து விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். 
மேலும் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை, வேப்பம் புண்ணாக்கு அளித்தல், கோடை உழுதல், இனக்கவர்ச்சி பொறி வைத்தல், மெட்டாரைசியம் அனைசோபிலி எனும் பூஞ்சையை பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்