நெல்லை: மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-27 20:43 GMT
நெல்லை:
தச்சநல்லூர் போலீசார் நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 70) என்பவரை கைது செய்தனர். இதேபோல் நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நெல்லை வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மது விற்றதாக கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரீகன் (35) என்பவரையும், டவுன் ஆர்ச் அருகே மது விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (42) என்பவரையும் கைது செய்தனர். மொத்தம் அவர்களிடம் இருந்து 37 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்