பாளையங்கோட்டை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் இம்மானுவேல் டேனியல் (வயது 31). இவருடைய மனைவி தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அவருக்கும், அதே ஊரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இம்மானுவேல் டேனியல் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மருமகனான சிவ பெருமாள் என்ற மச் னு, அன்பன் (22), அஜய் (21) ஆகியோர் சேர்ந்து இம்மானுவேல் டேனியலை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த இம்மானுவேல் டேனியல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்பன், அஜய் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.