நெல்லை: முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட்மாநகர் பகுதியை சேர்ந்தவர் தங்க கோனார் (வயது 65). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட தங்க கோனார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.