மது விற்ற 2 பேர் கைது
கொளத்தூர் அருகே மது விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கொளத்தூர்:-
கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 42). தார்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (28). இவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குருநாதன், பழனிசாமியை கைது செய்தனர்.