கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஒமலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-27 20:31 GMT
ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி உப்பாரப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொளசம்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் ஏழுமலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்