லாட்டரிசீட்டு விற்றவர் கைது
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை ஈஸ்வரிநகர் பகுதியில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆடல் ஈசன் ெதருவில் சந்தேகம் படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈஸ்வரிநகரை சேர்ந்த கலையரசன் என்பதும், அவர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர்.