பேரையூர்,
பேரையூர் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது சந்தையூர் பகுதியில், அதே ஊரை சேர்ந்த பால்சாமி (வயது 61), வேல்முருகன் (37), கருப்பையா (41), முத்தையா (65), எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த முருகன் (40) ஆகியோர் சூதாடினர். அப்போது ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து ரூ.18,620-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 52), பழனி (40), ராஜேந்திரன் (33), பாண்டி (52), சிட்டுலொட்டியை சேர்ந்த ஜெயராஜ் (32) ஆகியோர் சூதாடியபோது டி. கல்லுப்பட்டி போலீசார் கைது செய்து ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.