சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சத்திரம் அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
புவனகிரி,
புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் மேள, தாளம் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.