கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-27 19:20 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கலையரசி கண்டித்துள்ளார்.

 இதில் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார். இது குறித்து கரையரசி அளித்த புகாரின் பேரில்  ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்