தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கல்பனாதேவி. இவருடைய மகள் துர்காஸ்ரீ (வயது 19). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட துர்காஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.