வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

சிதம்பரம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.;

Update:2022-03-28 00:39 IST
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே ஓடாக்கநல்லூர் மற்றும் கே.ஆடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் ஓடை வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்ததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் கொள்ளிடம் வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் புகழேந்தி, பாசன ஆய்வாளர் அருண் குமார், பாசன உதவியாளர் மாரி மற்றும் உதவியாளர் அறிவழகன் அடங்கிய குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர் தொடர்ந்து வாய்க்கால் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்