சிங்கம்புணரியில்,பூஸ்டர் தடுப்பூசி முகாம்

சிங்கம்புணரியில், பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-27 19:06 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவில் மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நடத்திய முகாமை சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகிேயார் தொடங்கி வைத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு முன்னுதாரணமாய் இருப்பதற்காக பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் வார்டு கவுன்சிலர்கள் செந்தில், கிருஷ்ணன், திவ்யா, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்