கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்

கொள்ளிடம் அருகே கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

Update: 2022-03-27 18:51 GMT
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
கூரை வீடு தீப்பிடித்தது
கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரகுபதி (வயது35). விவசாய தொழிலாளி.  மேலும் மரம் அறுக்கும் எந்திரங்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று ரகுபதி வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் குப்பைகளை தீவைத்து எரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து தீப்பெறி அவரது கூரை வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த விவசாயிகளிடமிருந்து  பழுது நீக்க வாங்கி வைத்திருந்த 7
 மரம் அறுக்கும் எந்திரங்கள் மற்றும்  டி.வி. மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
 இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சீர்காழி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சந்தித்து அரசின்  நிவாரண உதவி வழங்கினர். 

மேலும் செய்திகள்