கரைக்கருப்பர் கோவிலில் வருடாபிஷேகம்
கரைக்கருப்பர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
காரையூர்:
காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கரைக்கருப்பர் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கரைக்கருப்பர் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை கோவனூர் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி வருடாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேலத்தானியம் கரைக்கருப்பர் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.