பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-27 18:30 GMT
திருப்பரங்குன்றம், 
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ராமசாமி நகர் வசித்து வருபவர் சுந்தரவள்ளி (வயது 51). இவர்நேற்று முன் தினம் மதியம் 11.30 மணி அளவில் திருப்பரங்குன்றத்தை அடுத்ததிருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே நெல்லை தெருவில் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி சுந்தரவள்ளியை உரசுவது போல சென்றுள்ளார். அதனால் சுந்தரவள்ளி தன்மீது வாகனம் மோதி விடக்கூடாது என்று ரோட்டின் ஓரத்தில் நிற்பதற்கு முயன்று உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுந்தர வள்ளி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டார். இதுதொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்