கொள்ளையர்களால் தாக்கப்பட்ட முதியவர் சாவு

திருப்பரங்குன்றம் அருகே மஞ்சள் பொடி தூவி கொள்ளையர்களால் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2022-03-27 18:24 GMT
திருப்பரங்குன்றம், 
திருப்பரங்குன்றம் அருகே மஞ்சள் பொடி தூவி கொள்ளையர்களால் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.
மஞ்சள்பொடி தூவி
திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறிநகரில்வசித்து வருபவர் நாகராஜன் (வயது 44) நெசவுத்தொழிலாளி.இவரது தந்தை நரசிம்மன் (வயது 90). கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவில் நாகராஜன் தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் தூங்கச் சென்று விட்டனர். 
 நரசிம்மன் வீட்டில் கீழ்த்தளத்தில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் கதவைத் தட்டினர். அப்போது நரசிம்மன் கதவைத் திறந்தபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி, மஞ்சள் பொடி தூவி உள்ளனர். இதில் நரசிம்மன் மயங்கி விழுந்தார்.
நகை- பணம் கொள்ளை
இந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 4 பவுன்தங்க நகை மற்றும் ரூ. 13 ஆயிரம் மற்றும் லேப்டாப் உள்படசில பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதற்கிடையே வீட்டின் மாடியில் இருந்து கிழே இறங்கிய நாகராஜ் தன் தந்தை தாக்கப்பட்டு காயத்துடன் தரையில் மயங்கி கிடந்ததையும், வீட்டில் பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நரசிம்மன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் கொள்ளைக்கான வழக்குப்பதிவு செய்துமர்ம நபர்களை தேடி வந்தனர்.
முதியவர் பலி
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் நரசிம்மன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் புலன் விசாரணை செய்துவருகின்றனர். நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் சமீபகாலமாக சங்கிலி தொடர் போல திருட்டு, வழிப்பறி, கொள்ளை நடந்து வருவதால் போலீசார் ரோந்து தீவிர படுத்தப்பட வேண்டும். புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். நிலையூர் கைத்தறி நகர் பகுதி முழுவதுமாக அனைத்து தெருக்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்